கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்ற காத்தவராயன்(58) இதயநோய் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று உடல் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் நேற்று மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரின் இறுதிச்சடங்கு பேர்ணாம்பட்டில் இன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
பிப்ரவரி 27ந்தேதி திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிலையில் மற்றொரு திமுக எம்எஏல் காத்தவராயன் உயிரிழந்துள்ளது திமுகவினருடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 98 ஆக குறைந்துள்ளது.