குடியாத்தம் திமுகஎம்எல்ஏ காத்தவராயன் இன்று காலமானார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ( தனி ) தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் காத்தவராயன்(58)திமுகவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர். திருமணம் செய்துக்கொள்ளவில்லை. தனது சகோதரர் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில்அவருக்குஇதயநோய் இருந்துள்ளது, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்தவருக்கு வேறு சில காரணங்களால் அது குணமாகாமல் கடந்த மாதம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓப்பன்ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. இருந்தாலும் கவலைக்கிடமான நிலையில் இருந்துவந்தார் காத்தவராயன்.

Advertisment

 Gudiyatham DMK mla passed away

இந்நிலையில் இன்று காலைசென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தகாத்தவராயன் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.

Advertisment

பிப்ரவரி 27ந்தேதி திமுகவை சேர்ந்த முன்னாள்அமைச்சரும், எம்.எல்.ஏவுமான கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தநிலையில்மற்றொரு திமுகஎம்எஏல் காத்தவராயன்உயிரிழந்துள்ளது திமுகவினருடையே சோகத்தைஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது சட்டப்பேரவையில் திமுகஎம்எல்ஏக்களின் எண்ணிக்கை98 ஆக குறைந்துள்ளது.