Guard son attacked and robbed of jewelry money!

Advertisment

திருச்சி கண்ட்ரோல் ரூம் காவலராக பணிபுரிந்து வருபவர் மூர்த்தி. மார்சிங்பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் இவரது மகன் மல்லேஸ்வர்(21), தேசிய கல்லூரியில் எம்.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் தங்கியிருக்கும் கல்லூரி தோழர்களான சண்முகவடிவேல், ஆசாத் பாரதியை தனது இருசக்கர வாகனத்தில் இறக்கி விடுவதற்காக மல்லேஸ்வர் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அபுதாகிர் என்கிற பாபு, அப்புச்சி (34), அருண், குட்டைமுத்து ஆகியோர் கல்லூரி மாணவர்களை வம்புக்கு இழுத்து தாக்கியதோடு அவர்களிடமிருந்த 3 ஒரு பவுன் தங்க சங்கிலி, செல்போன்கள், வெள்ளி பிரேஸ்லெட், 2 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இதில் காயமடைந்த மல்லேஸ்வரும், அவரது நண்பர்களும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்களை தாக்கிய 4 பேரும் விராலிமலை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் போலீசார் அவர்களை அங்கு தேடி வருகின்றனர்.