GST tax hike- Central Board of Direct Taxes explanation!

Advertisment

வணிகப் பெயர் இல்லாத 25 கிலோ எடைக்கு மேற்பட்ட அரிசி உள்ளிட்டத் தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், வரி உயர்வு தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. வணிகப் பெயர் இல்லாத 25 கிலோ எடை வரையில் மூட்டையில் அடைக்கப்பட்ட தானியங்களுக்கு மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 கிலோ எடைக்கு மேற்பட்ட அரிசி, பருப்பு, மாவு வகைகள் போன்ற பொருட்கள் கொண்ட ஒற்றை சிப்பங்களுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வணிகப் பெயர் இல்லாத 25 கிலோ எடையுள்ள தானிய மூட்டைகளை உற்பத்தியாளர்களிடமோ, அல்லது விநியோகஸ்தர்களிடமோ வாங்கி, அதைக் குறைந்த அளவுகளில் பிரித்து சில்லறையாக விற்பனை செய்வதற்கும் வரி இல்லை என அரசு கூறியுள்ளது.