ADVERTISEMENT

உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி! அடையாள கடை அடைப்பு போராட்டம் நடத்திய வியாபாரிகள்! 

03:18 PM Jul 16, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அரசு உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பான 5 சதவீதத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கரூரில் 1000க்கும் மேற்பட்ட அரிசி வியாபாரிகள், உணவுப் பொருள் வணிகர்கள் ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால், சுமார் ரூ.25 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு உணவு தானியங்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. இது சாமானிய மக்களை பாதிக்கும். எனவே, இந்த அறிவிப்பாணையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கரூரில் அரிசி ஆலைகள், அரிசி மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம், மளிகை கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், தானியமண்டி (வணிக வளாகம்) உள்ளிட்டவற்றின் உரிமையாளர்கள் வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் சுமார் 2500 கடைகளின் உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் ரூ. 25 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிவித்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT