Skip to main content

தொழிலதிபரின் வீடுகளில் திடீர் ரெய்டு மேற்கொண்ட ஜி.எஸ்.டி அமலாக்கத்துறை!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

GST enforcement raids businessman's homes

 

இராணிப்பேட்டை மாவட்டம், திமிரி, மாருதிபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் திமிரியில் பெரியளவில் பழைய இரும்புகளை வாங்கி விற்கும் இரும்புக்கடை நடத்திவருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபடும் இவர், திமிரி, ஆற்காடு பகுதியில் தொழிலதிபராகவும், சமூக சேவகராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வலம்வந்துள்ளார்.

 

இந்நிலையில், இவரது கடை, அலுவலகம், வீடு உள்ளிட்ட சில இடங்களில் ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை ஜி.எஸ்.டி வரி அமைப்பின் அமலாக்கத்துறை சார்பில் 30 பேர் கொண்ட டீம் ரெய்டு செய்தது. இணை ஆணையர் நவீன் தலைமையில் நடந்த இந்த ரெய்டு இரவுவரை நீடித்தது. இந்த ரெய்டில் ஜி.எஸ்.டி கட்டாமல் கோடிக்கணக்கில் ஏமாற்றியதற்கான ஆவணங்களைக் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் குடியாத்தம், நெல்லூர் பேட்டையில் உள்ள தொழிலதிபர் விஜயகுமார் வீடு, அலுவலகத்தில் 10 பேர் கொண்ட ஜி.எஸ்.டி புலனாய்வுப் பிரிவு டீம் ரெய்டு செய்துள்ளது. இங்கும் கோடிக்கணக்கில் வரி கட்டாமல் ஏமாற்றியதற்கான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்