Skip to main content

குழந்தைகள் பாதுகாப்பு மையங்களை கண்காணிக்க குழுக்கள் அமைப்பு! 

Published on 30/08/2018 | Edited on 30/08/2018
Groups system to monitor children's care centers!


குழந்தைகள் மையங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்தார்.
 

 

 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு விடுதிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக மாநில அரசு எடுத்து வரும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாலியல் உள்ளிட்ட பொதுவான குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு குழு தலைவர் மற்றும்  அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த், 
 

 

 

"தமிழகத்தின் திருமுல்லைவாயில் காப்பகத்தில் நடைபெற்ற சம்பவம் போன்று இனி நாட்டில் எங்கும் தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்காக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் காப்பகங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது.  இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் மையங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
 

அக்குழுக்களானது புதுச்சேரியில் உள்ள 60 காப்பகங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு 15 நாட்களுக்குள் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத்திற்கு  அறிக்கை சமர்பிக்க உள்ளன.  ஆணையத்தின் தேசிய உறுப்பினர்களும் காப்பகங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட உள்ளனர்" என்றார். மேலும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் புதுச்சேரியில் குழந்தைகளுக்கு எதிராக 18 பாலியல் புகார்கள் வந்துள்ளதாகவும் ஆனந்த் கூறினார்.
 



 

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்படத்தில் நடிக்கும் ஆசை; சென்னைக்கு புறப்பட்ட எட்டாம் வகுப்பு மாணவர்கள் 

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

interest in become a film actors so eighth standard students came in chennai 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை - திருவெண்ணெய்நல்லூர் செல்லும் சாலையில் அருகே உள்ள களமருதூர் பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் வெவ்வேறு பள்ளிகளில் படித்தாலும்  ஒரே பகுதியில் வசித்து வந்ததால் ஊரில் அடிக்கடி ஒன்றாக விளையாடி அதன் மூலம் நண்பர்களாக இருந்துள்ளனர்.

 

இவர்கள் மூவரும் நேற்று முன் தினம் காலை களமருதூர் கிராமத்தில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியுள்ளனர். மாலை வரை வீட்டிற்குத் திரும்பாததால் பிள்ளைகளின் பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். மேலும் அருகில் உள்ள உறவினர் வீடுகளிலும் தேடிப் பார்த்தனர்.  அங்கும் இவர்கள் இல்லாததால் அதன்பிறகு திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து  வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன சிறுவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உளுந்தூர்பேட்டை செல்லும் அரசு பஸ் மூலம் மூன்று மாணவர்களும் ஏறிச் சென்றதாக சிலர் தகவல் கூறியுள்ளனர்.

 

இந்த நிலையில் சென்னையில் வசித்து வரும் சிறுவர்களில் ஒருவனின் அத்தை வீட்டில் மூன்று சிறுவர்களும் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்னைக்குச் சென்ற போலீசார் அங்கிருந்து மூன்று மாணவர்களையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில், களமருதூரில் இருந்து உளுந்தூர்பேட்டை பஸ்ஸில் வந்து இறங்கிய மூவரும் உளுந்தூர்பேட்டையிலிருந்து சிதம்பரம் செல்லும் பஸ்ஸில் சிதம்பரம் சென்றுள்ளனர். சிதம்பரத்திலிருந்து ரயில் மூலம் சென்னை எழும்பூர் சென்று அங்கிருந்து பேருந்து மூலம் ராயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றதாகக் கூறியுள்ளனர்.

 

எதற்காக சென்னைக்குச் சென்றார்கள் என்பது குறித்து கேட்டபோது திரைப்படத்தில் நடிக்கும் ஆவலில் புறப்பட்டுச் சென்றதாகக் கூறியுள்ளனர். காணாமல் போன சிறுவர்களை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்த காவல்துறையினருக்கு சிறுவர்களின் பெற்றோர்களும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

டான் போஸ்கோ பள்ளியில் நிறுவப்பட்டுள்ள கரோனா பராமரிப்பு மையம்..! (படங்கள்)

Published on 20/05/2021 | Edited on 20/05/2021

 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் பரவல் கடும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி, ஆக்சிஜன் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் பாதிப்பைக் கருத்தில்கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட அமைச்சர்களின் உதவியோடு மேற்கொண்டுவருகிறது.

 

அந்தவகையில், முதற்கட்டமாக கரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு படுக்கை வசதி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் வசதியுடம் கூடிய படுக்கை வசதிகளை தமிழக அரசின் அனுமதியோடு பல தனியார் நிறுவங்கள் பாதுகாப்பு மையம் அமைத்து உதவிவருகின்றன. அந்த வகையில், சென்னையில் உள்ள டான் போஸ்கோ உயர்நிலைப்பள்ளி 104 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா பராமரிப்பு மையத்தை நிறுவியுள்ளது. அதனை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பானது நடைபெற்றது அதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் சிங் பேடி ஆகியோர் பங்கேற்றனர்.