ADVERTISEMENT

விதிமீறினால் 14 நாட்களுக்கு சீல்... சென்னையில் கடைகளை கண்காணிக்க குழுக்கள் அமைப்பு!!

05:05 PM Jul 11, 2020 | kalaimohan

ADVERTISEMENT

சென்னையில் நாளுக்கு நாள் கரோனா எண்ணிக்கை என்பது அதிகரித்து வரும் நிலையில், விதிமீறல்கள் இருந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

சென்னையில் காய்கறி, மளிகை கடைகள், இறைச்சி, மீன் கடைகளில் விதிமீறல்கள் இருந்தால் ஆதாரத்துடன் 14 நாட்களுக்கு கடைகள் மூடப்பட்டு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் காவல் நிலையங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் விதிகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், மளிகை கடைகள் மற்றும் இறைச்சி, மீன் அங்காடிகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நோய்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதை கண்காணிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோட்ட உதவி பொறியாளர் தலைமையில் 81 சந்தை ஒழுங்குபடுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வட்டாட்சியர் தலைமையில் 32 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT