Advertisment

அரிவாளுடன் வந்து இரண்டு லிட்டர் எண்ணெய்யை எடுத்துச் சென்ற கும்பல்! 

The group took two liters of oil!

Advertisment

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பாலாஜி நகா் பகுதியில் உள்ள மரச்செக்கு எண்ணெய் கடையில் மேலாளராகவும், கணக்காளராகவும் பணியாற்றி வருபவா் சுபா(30). நேற்று முன்தினம் இவா், வழக்கம் போல் நிறுவனத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாலை 7.30 மணியளவில் நிறுவனத்திற்கு வந்த பேரூர் அக்ரஹாரம் பகுதியை சோ்ந்த சக்திவேல்(35), மலைக்கோட்டை கீழ ஆண்டாள் வீதியை சோ்ந்த காளிதாஸ்(32), மேல தேவதானம் பகுதியை சோ்ந்த சுதாகா்(30) உள்ளிட்ட 3 பேரும் கையில் அரிவாளுடன் உள்ளே நுழைந்து அவருடைய முதலாளியை கேட்டுவிட்டு சுபாவின் 2 செல்போன் மற்றும் 2 லிட்டா் எண்ணெய்யை எடுத்து கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பித்து சென்றுள்ளனர்.

இது குறித்து சுபா திருவெறும்பூா் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேரையும் காவல்துறையினா் கைது செய்தனர். இதில் சக்திவேல் மற்று காளிதாஸ் இருவர் மீதும் ஜீயபுரம், மண்ணச்சநல்லூர் காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe