Advertisment

உணவு கிடங்கை ஆய்வு செய்த சட்டப்பேரவை ஏடுகள் குழுவினர்!

கொடைக்கானலில் குடிமைப்பொருள் தொடங்கிய சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள ஏடுகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கொடைக்கானலில் சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுவினர் சார்பில் ஆலோசனைக்கூட்டம் கோகினூர் அரசு விருந்தினர் இல்லத்தில் நடைபெற்றது.

Advertisment

உணவு கிடங்கை ஆய்வு செய்த சட்டப்பேரவை ஏடுகள்  குழுவினர்!

இக்கூட்டத்திற்கு குழுவின் தலைவர் சத்யநாராயணன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வைத்தார். கூட்டத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் 2011 2012 முதல் 2016 2017 வரையிலான ஆய்வு அறிக்கைகள் பேரவையில் காலதாமதமாக வைக்கப்பட்டன இதுகுறித்து அரசுத்துறையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கஸ்தூரி வாசு, சீனிவாசன், சதீஷ் மற்றும் செயலாளர் ரவிச்சந்திரன் துணைச் செயலாளர் பூபாலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கணினிகளின்செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாடு, ஒவ்வொரு துறையிடம் இருந்து வரும் அறிக்கைகள் பெறுவதில் உருவான கால தாமதத்தால்ஒவ்வொரு துறைகளின் அலுவலர்கள் இடமாற்றத்தின்போது அறிக்கை ஏடுகளில் நகர்வுகள் தாமதமாவதால் ஆண்டறிக்கை தாமதமானதாகஅதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாகவும், இதுபோன்றுகாலதாமதம் ஏற்படுவதால் மக்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய முழுமையான திட்டங்களை கொண்டு செல்ல முடியாது எனவும், இவ்வாறு ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் வகையில்விரைந்து செயல்படுத்தும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் குழுத் தலைவராக அறிவுறுத்தப்பட்டது.

Advertisment

kodai

இதனைத் தொடர்ந்து இக்குழுவினர் கொடைக்கானல் அப்சர்வேட்டரியிலுள்ள குடிமைப்பொருள் கிட்டங்கியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்கப்படும் அரிசி மற்றும் உணவுப் பொருட்களில் தரம் குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து இக்குழுவினர் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை உள்ள குழந்தை வேலப்பர் கோயில் மற்றும் மன்னவனூர் பகுதிகளையும் பார்த்தனர். இக்குழுவினர் தொடர்ந்து கொடைக்கானலில் தங்கி ஆய்வு செய்து வருகிறார்கள்.

inspection kodaikanal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe