Advertisment

குரூப் 4 முறைகேடு... சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி முறையீடு! 

ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதிய 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்து, முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தகுதி நீக்கம் செய்துள்ள தேர்வாணையம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுத தடை விதித்துள்ளது.

Advertisment

Group 4 malpractice.. appeal to CBI probe!

குரூப்-4 தேர்வில் பணிக்கு ஏற்றவாறு பணம் வசூலிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. அலுவலக உதவியாளர், சுருக்கெழுத்தர் போன்ற பணிக்கு 5 லட்சம் ரூபாயும், கிராம நிர்வாக அதிகாரி பணிக்கு எட்டு லட்ச ரூபாய் வரையிலும் வசூல் செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. பணிக்கு ஏற்றவாறு பணம் வசூல் செய்யப்பட்டு, அதற்கு ஏற்றவாறு மதிப்பெண்கள் போடப்பட்டு தரவரிசை பட்டியலில் இடம்பெற வைத்ததாகவும் தெரியவந்துள்ளது. தற்போது வரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதுநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் இந்த முறைகேடு வழக்கைசிபிசிஐடி விசாரித்தால்உண்மை வெளியே வராதுஎனவே சிபிஐக்கு இந்த வழக்கைமாற்றிவிசாரிக்க வேண்டும் எனமதுரைஉயர்நீதிமன்ற கிளையில்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

CBI exam group4 TNPSC EXAM
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe