Group 4 exam begins

Advertisment

தமிழகம் முழுவதும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று காலை தொடங்கியது.

அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமான டி.என்.பி.எஸ்.சி. வாயிலாக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கான குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. மொத்தம் 22 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணபித்துள்னர். அதில் 12 லட்சத்து 67 ஆயிரம் பெண்களும் 131 மூன்றாம் பாலினத்தவர்களும் அடக்கம்

இதற்காக மாநிலம் முழுவதும் 7,689 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 503 மையங்களில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதுவோரின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 670 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.