Advertisment

சாலையில் பள்ளம் -  கண்ணீர் அஞ்சலி போஸ்டர், ஊர்வலம் நடத்திய மக்கள்

b

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் பழைய வாணியம்பாடி, புதிய வாணியம்பாடி என இரண்டு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளை பிரிப்பது இரயில்பாதையும், தேசிய தங்கநாற்கர சாலையும் தான்.

Advertisment

பழைய வாணியம்பாடி என்கிற பகுதியில் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, காவல்நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், மார்க்கெட் என உள்ளது. புதிய வாணியம்பாடி பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், நகராட்சி அலுவலகம், டி.எஸ்.பி அலுவலகம், சில தொழிற்சாலைகள் மற்றும் இரயில் நிலையமும் உள்ளது. இரண்டு புறமும் குடியிருப்பு பகுதிகளிலும் உள்ளன.

Advertisment

பேருந்து நிலையம் அருகில் புதிய வாணியம்பாடி பகுதிக்கு செல்லும் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த பாதை அடிக்கடி மூடப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஏற்கனவே இருந்த பாதாள சுரங்க வழி கழிவு நீர் மற்றும் தார்சாலை போடப்படும்போதெல்லாம் உயர்த்தியதால் அந்த சுரங்க வழி மூடப்பட்டுவிட்டது. அந்த பாதையை மீண்டும் புதியதாக அமைக்க வேண்டும் என பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 7 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சியில் உள்ள அதிமுகவும் அதுப்பற்றி கண்டுக்கொள்ளவில்லை.

gg

இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு பாதாள சுரங்க வழி ஏற்படுத்த இரயில்வே துறை நிதி ஒதுக்கியது. உடனடியாக டெண்டர் விடப்பட்டது. வேலையை தொடங்கப்போகிறோம் என பழைய – புதிய வாணியம்பாடிகளை இணைக்கும் சாலையில் ரயில்வே கேட்டின் இருபுறமும் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி வாகனங்கள் செல்ல முடியாமல் தடுத்தது. இதனால் மக்கள் 5 கி.மீ சுற்றிக்கொண்டு இரண்டு புறமும் சென்றுவந்தனர்.

பள்ளம் தோண்டியதோடு சரி வேலையை தொடங்கவில்லை. இதுப்பற்றி பொதுமக்கள் இரயில்வே நிர்வாகத்திடம் கேட்க அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை. இந்த தொகுதியின் எம்.எல்.ஏவும், அமைச்சருமான நிலோபர்கபிலிடம் முறையிட்டனர். அப்போதும் வேலையை தொடங்கவில்லை.

அந்த பள்ளம் கடந்த 2017 செப்டம்பர் 11ந்தேதி தோண்டப்பட்டு சாலையை மூடினர். தற்போது அது ஒரு வருடம் முடிந்ததையொட்டி வாணியம்பாடி இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து, முதலாமாண்டு நினைவு தினம் என போஸ்டர் அடித்து நகர் முழுவதும் ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில் வாணியம்பாடி சமூக நல ஆர்வலர்கள், பொதுமக்கள், இஸ்லாமிய பெண்கள் கலந்துக்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

அனுமதியில்லாமல் நடத்தும் கூட்டமென போலிஸார் கூட்டத்தை கலைக்க முயல, பொதுமக்கள் போராட்டம் நடத்திவிட்டே கலைந்துசென்றனர்.

block
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe