
இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) சார்பில் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளுக்கு எதிரான பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2 முதல் 12 வரை 10 நாட்கள் இது வழி நடத்தப்படும் என அந்த அமைப்பினர் கூறியுள்ளனர். இது நல்ல காரியம் என்பதால் பல தரப்பினரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இது இன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஒரு திருமண நிகழ்விலும் இது எதிரொலித்தது. மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜெகபர் சாதிக் என்பவருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. மணமேடைக்கு செல்வதற்கு முன்பாக மணமகன் இந்த பரப்புரைக்கு ஆதரவு தெரிவித்து கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை மருந்துகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினார். அவரோடு வந்த கட்சியினரும், நண்பர்களும் அதை பின்பற்றி முழங்கினர். இது திருமணத்திற்கு வந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினாலும், நல்ல ஒரு முயற்சி என பாராட்டப் பெற்றது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)