Advertisment

ஏழை மாணவர்களுக்கு உதவி பொருட்கள்... காவலர் சிறார் மன்றத்திற்கு பாராட்டு... (படங்கள்)

Advertisment

சென்னை, சூளைமேடு பகுதியிலுள்ள நமச்சிவாயபுரம் ஆற்றோரத்தில் வசிக்கும் 100 ஏழை பள்ளி மாணவர்களுக்கு சூளைமேடு காவல் நிலைய சிறார் மன்றம் சார்பாக உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்வு நேற்று (01.12.2020) மாலை நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வை சூளைமேடு காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு மற்றும் நிலைய காவல் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் நுங்கப்பாக்கம் உதவி ஆணையர் முத்துச்சாமி கலந்துகொண்டு மாணவர்களுக்கு உதவி பொருட்களை வழங்கினார். நிகழ்வின்போது சூளைமேடு பகுதியில் வசிக்கும் சிறுவர், சிறுமிகளை ஒருங்கிணைத்து காவலர் சிறார் மன்றத்தை செயல்படுத்தி வரும் உதவி ஆய்வாளர் திலகவதியை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர். மேலும்,உதவி ஆய்வாளர்கள் இராமகிருஷ்ணன், மாரீஸ்வரன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

police students
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe