தமிழகத்தில் கரோனா பரவுதலை கட்டுப்படுத்த, தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில், ஏற்கனவே ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பல தன்னார்வலர்கள் ஏழை மக்களுக்கும், சாலையோரத்தில் வசிக்கும்மக்களுக்கும் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

Advertisment

தற்போது, தமிழ்நாடு நகர்புற கூட்டுறவு சங்கத்தின் (TUCS) கடைகள் மூலமாக, 19 வகை மளிகைபொருட்களை மலிவு விலையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக மளிகைப் பொருட்களை பேக் செய்யும் பணி சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது.

Advertisment