Grievance Meeting; Associate Director of Agriculture Don't do Kattpanchayath with the farmers

காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள் கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் தரக்குறைவாக பேசியதால் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் குறை தீர்ப்பு கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரையா தலைமையில் விவசயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்ரு நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அறிக்கையை வாசிக்க ஆரம்பித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளராக இருந்து வரக்கூடிய நேரு இந்த அறிக்கை தொடர்பாக பேச எழுந்தார். அவர் பேசுகையில் குறுகிட்ட வேளாண் இணை இயக்குநர் நீங்கள் அரசியல் கட்சியை சார்ந்தவர். கட்டப்பஞ்சாயத்து போல் இங்குபேசக்கூடாது, உட்காருங்கள் என்று கூறியுள்ளார்.

Advertisment

வேளாண் இயக்குநரின் தரக்குறைவான பேச்சைக்கேட்ட விவசாயிகள் பலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்ய முற்பட்டும் விவசாயிகள் அதனை பொருட்படுத்தாமல், வேளாண் இயக்குநர் தன் பேசிய பேச்சை திரும்ப பெறும் வரை கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று கூறி அலுவலகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை டொடர்ந்து கூட்டத்திற்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வேளாண் இயக்குநர் கூறிய வார்த்தையை திரும்ப பெற விவசாயிகள் அறிவுறுத்தினர். கூட்டம் முடிந்ததும் இது குறித்து விசாரிக்கிறேன் என மாவட்ட ஆட்சியர் உறுது அளித்த பின் கூட்டம் நடைபெற்றது. மேலும் வேளாண் இணை இயக்குநர் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

இதன் பின் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடை பெற்றது.