gridharan family incident in Kunradhur near Chennai

சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் கிரிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், 6 வயதில் வைஷ்ணவி என்ற பெண் குழந்தையும், ஒரு வயதில் சுதர்சன் என்ற மகனும் உள்ளனர். இதில் கிரிதரனும், அவரது மனைவி பவித்ராவும் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இவர்கள் குடியிருக்கும், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏராளமான எலி தொல்லை இருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடுகளில் பல்வேறு இடங்களில் எலிகளை ஒழிக்கக் கூடிய மருந்துகளை வைத்துள்ளனர். இதனையடுத்து இந்த மருந்தில் உள்ள வேதிப்பொருட்கள் காற்றில் பரவி அறையில் இருந்த நான்கு பேருக்கும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நான்கு பேரும் குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Advertisment

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம் கிரிதரன் மற்றும் மனைவி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேற்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காற்றில் பரவிய எலி மருந்தின் நெடி காரணமாக இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்துக் குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.