Greetings from Tamil Nadu Chief Minister M. K. Stalin on the occasion of Bakrit!

பக்ரீத் பண்டிகையையொட்டி, இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள்!

Advertisment

அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும், அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும் என்ற உயரிய கோட்பாடுகளோடு, நபிகள் நாயகம் அளித்த போதனைகளைப் பின்பற்றி இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரர்கள் இந்தப் பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.

நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்த தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும், கரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து தியாகப் பெருநாளைப் பாதுகாப்புடன் கொண்டாடிட வேண்டும் எனக் கேட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment