Advertisment

வழிகாட்டி பலகையில் வாழ்த்து பேனர்... ஆளுங்கட்சி அட்ராசிட்டி..!

Greeting banner on the guide board ...

Advertisment

சென்னையில் பொது இடங்களில் போஸ்டர், விளம்பரங்கள் ஒட்டுவதற்கு தடை உள்ளது. இருப்பினும் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ‘நீத்தார் நினைவு அஞ்சலி’ போஸ்டர்கள், ‘வாழ்த்த வயதில்லை......’ என பொய் உரைகள் புகழும் பிறந்தநாள் போஸ்டர்களும் பளிச்சிடுகின்றன.

ஜெ. உயிரோடு இருக்கும்போது அவ்வப்போது கட்சிதலைமை அலுவலகத்திற்கு வருவார். அப்போது அவரை கவரும் வகையில் இரட்டை இலை சின்னம் வடிவில் கம்மல் அணிந்து குத்தாட்டம் போடுவார் மகளிரணியை சேர்ந்தவரும், மாஜி கவுன்சிலருமான கற்பகம்.

இவரைப்பற்றி மீம்ஸ்கள் வலைத்தளங்களில் வலம் வரும். அந்த அளவுக்கு பேமஸானவர்.கடந்த வாரம் கற்பகத்திற்கு பிறந்த நாள் என்பதால் தேனாம்பேட்டை, தி.நகர், நுங்கம்பாக்கம் ஏரியாக்களில் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டி அதகளப்படுத்தினர் ர.ரக்கள். அதிலும் பல போஸ்டர்கள் சாலை வழிகாட்டி பலகைகளில் தான் இடம் பிடித்திருந்தன.

Advertisment

Greeting banner on the guide board ...

வழக்கமாக பேனர் விவகாரத்தில் தவறு நடந்தால் அதனை அச்சடித்த பிரஸ் உரிமையாளரைதான் போலீஸ் கைது செய்யும். இந்த விஷயத்திலும் அப்படித்தானோ!? தனியார் நிறுவனத்தில் ஊழியர்கள் மாஸ்க் அணியவில்லை என ரூ.10,000 அபராதம் விதித்த மாநகராட்சி நிர்வாகம் இதுபோன்ற அத்துமீறல்களை கண்டுக்காமல் இருப்பது ஏனோ?

Poster admk Chennai corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe