திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை மையமாக கொண்டு இழந்து வரும் பசுமையை காக்க புயலில் அழிந்த மரங்களை மீட்க உருவாக்கப்பட்டது கிரீன் நீடா என்ற அமைப்பு. தன்னார்வமுள்ள இயற்கை ஆர்வலர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டு நீடாமங்கலம் முதல் சுற்றுவட்டார கிராமங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். நஞ்சில்லா உணவுக்காக நாட்டுக் காய்கறிகளின் மாடித்தோட்டம் அமைப்பதை முன்னெடுத்து பயிற்சியும் கொடுத்து விதைகளையும் வழங்கினார்கள்.
இவர்களின் அடுத்த முயற்சியாக கிராமங்களில் கிடைக்கும் இடங்களில் எல்லாம் குருங்காடுகளை உருவாக்குவது. அதன் முதல்கட்டமாக நீடாமங்கலம் பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 25 ஆயிரம் சதுரடி நிலத்தில் குருங்காடு அமைக்க கிரீன் நீடாவுடன் கைகோர்த்தது பேரூராட்சி நிர்வாகம். குருங்காடு அமைக்க வேண்டும் என்றது கிரீன் நீடாவுடன் 15 தன்னார்வ அமைப்புகளும் இணைந்தார்கள் ஆர்வமுள்ள தனிநபர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்ததகவல் அறிந்த இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா தனது அறக்கட்டளையில் இருந்து மரக்கன்றுகளை வழங்குவதாக சொன்னதுடன் பலன் தரும் பல வகையான சுமார் 1000 பழ மரக்கன்றுகளை வழங்கினார்.25 ஆயிரம் சதுரடியில் நடைபயிற்சிக்காகவும் காட்டின் மையத்தில் நூலகம் படிப்பகம் அமைக்கவும் இடம் ஒதுக்கிவிட்டு 2 அடிக்கு ஒரு கன்று வீதம் நடவு செய்தனர். பேரூராட்சியில் சேகரிக்கப்பட்ட மட்கும் குப்பைகளை அடிய உரமாக போட்டு கன்றுகள் நடப்பட்டுள்ளது.
இது குறித்து கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு கூறும்போது..
புயல்களில் அழிந்த மரங்களை மீட்க உருவாக்கப்பட்ட அமைப்பு இன்று பள்ளிகளிலும் பரவியுள்ளது. கிராமங்களில் நாங்கள் நட்ட மரக்கன்றுகள் வளர்கிறது. அடுத்தகட்டமாக தான் குருங்காடு வளர்ப்பு திட்டம். முதலில் பேரூராட்சியுடன் இணைந்து முதல்காட்டை உருவாக்கியாச்சு அடுத்து இதுபோல இடங்களை காட்டினால் காடு வளர்க்க தயாராக உள்ளோம். காட்டுக்குள் தூய காற்றை சுவாசிக்க நடைபாதையும் இயற்கையோடு இருந்து படிக்க நூலகம், படிப்பகம் அமைக்கப்படுவதுடன் பறவைகளுக்காக ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்படும். 10 ஆண்டுகளில் வளர்க்க வேண்டிய மரங்களை குருங்காடுகளில் 3 ஆண்டுகளில் வளர்த்துவிடுவோம். எங்கள் முயற்சிக்கு தன்னார்வலர்களின் ஒத்துழைப்பும் உதவியும் நிறைய கிடைக்கிறது. தற்போது கூட முதல் குருங்காட்டுக்கானமரக்கன்றுகளை சென்னை கிருஷ்ணபிரியா அறக்கட்டளையினர் வழங்கியுள்ளனர். அதேபோல பலரும் உதவியுள்ளனர் என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/zzz5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/zzz1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/zzz2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/zzz3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/zzz4.jpg)