Advertisment

பசுமை வீடுகள்... முதல்கட்டமாக ரூபாய் 299 கோடி நிதியை விடுவித்தது தமிழ்நாடு அரசு!

Green houses ... Government of Tamil Nadu released Rs 299 crore in the first phase!

Advertisment

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 20,000 வீடுகள் கட்ட முதற்கட்டமாக 209 கோடி ரூபாய் நிதி விடுவித்து, தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கிராமப்புறப் பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள வீடு இல்லா ஏழைகளுக்கு, சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளை அரசுக் கட்டித் தருகிறது. இத்திட்டத்தின் கீழ் 20,000 வீடுகளைக் கட்ட, அரசின் மானியமாக 499 கோடியே 22 லட்சம் ரூபாயை ஒதுக்கி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் முதல்கட்டமாக, 299 கோடி ரூபாயை விடுவித்து, தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இவற்றில் பட்டியலின மக்களுக்கு தலா ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய் மானியத்தில் 11,197 வீடுகளும், பழங்குடியின மக்களுக்கு, தலா மூன்று லட்சம் ரூபாய் மானியத்தில் 8,803 மூன்று வீடுகளும் கட்டப்படவுள்ளன. அனைத்து வீடுகளும் முறையாகக் கட்டப்படுவதை உறுதிச் செய்ய, ஒவ்வொரு நிலையிலும் கட்டுமானத்தை புகைப்படம் எடுத்து, ஆவணப்படுத்திய பின் மானியத் தொகையை விடுவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

order
இதையும் படியுங்கள்
Subscribe