Advertisment

தஞ்சையில் பச்சைக்கொடி பேரணி! - காவிரி உரிமை மீட்புக்குழு அறிவிப்பு!

 Green flag rally in Tanjore! -Cauvery Rights Rescue Committee announcement!

இன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், திருவாரூரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக்கூட்டத்தில்அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ம.ஜ.க பொதுச் செயலாளர், எம்.எல்.ஏமு.தமிமுன் அன்சாரி,விவசாயச் சங்க கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் காவிரி தனபாலன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் மருத்துவர் பாரதிமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Advertisment

இதில், டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசின் உழவர் ஒழிப்புச்சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், எதிர்வரும் ஜனவரி 21 வியாழன் அன்றுகாலை, தஞ்சாவூரில் பிரம்மாண்ட பச்சைக்கொடி பேரணி நடத்துவது என்றும் முடிவானது.

Advertisment

அதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் இந்தச்சட்டங்களின் பாதகங்களை விளக்கி துண்டுப் பிரச்சார பரப்புரை நடத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்க முடியாதவர்களும், போராட்ட ஆதரவாளர்களும், வெளிமாநிலங்களில்வாழும் தமிழர்களும், வெளிநாடுவாழ் தமிழர்களும் அன்று காலை சமூக இணையதள வழியான போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் எனவும்வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ம.ஜ.க மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில விவசாய அணிச் செயலாளர் அப்துல் சலாம், திருவாரூர் மாவட்டப்பொருளாளர் ஷேக் அப்துல்லா, தலைமைச்செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் எரவாஞ்சேரி நஜ்முதீன் ஆகியோர்பங்கேற்றனர்.

Kavery water p maniyarasan taminmum ansari mla
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe