ADVERTISEMENT

“கதக் கலையின் மிகச் சிறந்த தூதராக விளங்கியவர்” - மு.க.ஸ்டாலின் இரங்கல்

01:01 PM Jan 17, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புகழ்பெற்ற கதக் நடனக்கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் (83) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன், தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர் பிர்ஜு மகராஜ். நேற்று பின்னிரவு அவர் தனது டெல்லி வீட்டில் இருந்தபோது, திடீர் உடல் நலக்குறை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது வீட்டார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், அவரின் குடும்பத்தாரும், அவரது ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நடிகர் கமலின் விஸ்வரூபம் படத்தின் ‘உன்னைக் காணாது நான்’ பாடலுக்காக தேசிய விருதை வென்றவர் பிர்ஜு மகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. பிர்ஜு மகராஜுக்கு சில நாட்களுக்கு முன்பு சிறுநீரக பிரச்சனை இருந்ததாகவும், அதற்காக அவர் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இவரது மறைவுக்கு நடனக் கலைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிர்ஜு மகராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது; “புகழ்வாய்ந்த கதக் நடனக் கலைஞர் பண்டித பிர்ஜு மகாராஜ் மறைந்ததை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். கதக் கலையின் மிகச் சிறந்த தூதராக விளங்கிய அவர் வளமான ஒரு மரபைக் கொடையாக விட்டுச் சென்றுள்ளார்.

பண்டித பிர்ஜு மகாராஜ் மறைவு நமது நாட்டுக்கும் கதக் கலைக்கும் மிகப் பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT