சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (15.03.2023) அண்ணா சாலை, ஸ்பென்சர் சிக்னல் சந்திப்பில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட வேகக் காட்சி பலகைகள், தானியங்கி சிக்னல், எல்.இ.டி போக்குவரத்து சுழற்சி செய்தி நிழற்குடை மற்றும் பல்நோக்கு செய்தி பலகைகள் ஆகியவற்றின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.