Skip to main content

சென்னையில் இரண்டு நாட்கள் கோவாக்சின் தடுப்பூசி சிறப்பு முகாம்!

 

greater chennai corporation announced covaxin special camps

 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (23/06/2021), நாளை மறுநாள் (24/06/2021) கோவாக்சின் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் முகாமில் தடுப்பூசிப் போட்டுக்கொள்ளலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

 

இதனிடையே, மூன்றாம் கட்ட சோதனை தரவுகள் மூலம் கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாம் கட்ட சோதனை தரவுகளை நிபுணர்கள் குழு மதிப்பாய்வு செய்துள்ளது.