Advertisment

புருவங்களை உயர வைக்கும் மகா மரியாதை -தூய்மைப் பணியாளர்களுக்கு காவல் துறையின் கிரேட் சல்யூட்

மனிதப் படுகொலைகளை நடத்தி வருகிறது கரோனா வைரஸ். கண்ணுக்குத் தெரியாத அந்த வைரஸை எதிர்த்து மருத்துவர்கள் போராடுகிறார்கள். சமூகமோ அந்த வைரஸ் தொற்றைக் கண்டு அஞ்சி நடுங்கிறது.

Advertisment

ddd

கரோனாவை ஒடுக்க மருத்துவர்களின் தொடர் போராட்டம் ஒரு புறமென்றால் மறுபுறமோ அந்த வைரஸ் மக்கள் பகுதிகளில் பரவிவிடக் கூடாது என்பதற்காக மக்களைக் காப்பாற்ற துப்புறவு பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள் மாநகரம் முழுவதும் அன்றாடம் கிருமிநாசினி தெளித்து நகரத்தையே சுத்தப்படுத்துகிறார்கள். இது அன்றாட நிகழ்வுதான். மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் இரண்டு தரப்புமே தங்களின் உயிரைப் பணயமாக வைத்தும் துச்சமாக நினைத்தும், வாழ்க்கையே ரிஸ்க் எடுத்து கடந்த இரண்டு வாரங்களாகத் தொய்வின்றிப் பணியாற்றி வருகின்றனர்.

Advertisment

முன்பெல்லாம் தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் பணியைச் செய்கிறார்கள் என்ற சமூகப் பார்வை அவர்கள் மீது படர்ந்ததுண்டு. தற்போதைய கொரோனா நெருக்கடியில் அவர்கள் கடவுளாகப் பார்க்கப்படுகிறார்கள்.

அவர்களின் உயிர் சேலன்ஜை மதித்து கௌரவப்படுத்தும் வகையில் மாநகர காவல்துறையின் சார்பில் உட்சபட்ச மரியாதையான மரியாதைக் காப்பு அணிவகுப்பு செலுத்தப்பட்டுள்ளது.

http://onelink.to/nknapp

இன்று காலை ஏழு மணியளவில் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மாநகர தூய்மைப் பணியாளர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் முன்நிற்க நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், மற்றும் உதவி கமிசனர் சரவணன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் சூழ, தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்துகிற வகையில் மரியாதை காப்பு அணி வகுப்பு காவல்துறைப் படையினரால் நடத்தப்பட்டது.

காவல் துறையின் இந்த மரியாதைகாப்பு அணிவகுப்பு என்பது சாதாரணமல்ல. காவல்துறையின் மாநில உயர் மட்டக் காவல்துறைத் தலைவர், பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிற GUARD OF HONOUR எனப்படுகிற உட்சபட்ச மரியாதைகாப்பு அணி வகுப்பு அந்தஸ்து. அத்தகைய கௌரவம் தூய்மைப் பணியாளர்களுக்குத் தரப்பட்டது பொருத்தமோ பொருத்தம்.

CLEANER EMLOYEES police corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe