Published on 27/01/2021 | Edited on 27/01/2021

சென்னை பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் என்ற இடத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமான குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீப்பிடித்து எரியும் இந்த குடோனின் அருகில் 10க்கும் மேற்பட்ட குடோன்கள் அமைந்துள்ளது. பார்சல்கள் அனுப்பக்கூடிய பேலட்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ள இந்த குடோனில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. தீப்பிடித்து எரிவதால் அந்த இடத்தில் கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த தீவிபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.