villupuram district

விழுப்புரத்தில்குடிசைப்பகுதிதீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் கரசனூர் சித்தேரிபகுதியில், 15-க்கும் மேற்பட்ட இருளர் குடியிருப்பு உள்ளது. முழுமையாகக் குடிசைப்பகுதியாக உள்ள இந்தக் குடியிருப்பில், ரங்கநாதன் என்பவர் வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏற்பட்ட எதிர்பாராத தீ, அருகில் உள்ள கூரை வீட்டிற்குப் பரவியுள்ளது.

Advertisment

பற்றி எரிந்த தீயை அணைக்க அங்கிருந்தவர்கள் முயன்றும், தீயானது கட்டுக்கடங்காமல்,12 குடிசைகளுக்கும் பரவி, அங்கிருந்த 12குடிசை வீடுகளும் முழுவதுமாக எரிந்து நாசமாகின. அதேபோல்அந்தகுடிசை வீடுகளில்வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களும் தீயில்எரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக வந்து அங்கிருந்துமக்களை மீட்டுப்பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் வருகின்றனர்.இந்த தீ விபத்தில் நான்கு கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்டத் தகவல்கள்வெளியாகியுள்ளது.