/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2228.jpg)
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா புகழ்பெற்றது. அதிலும் ஏழாவது நாள் திருவிழாவான மகா ரதம்வீதியுலா முக்கியமானது. 3 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினர், அதிகாரிகள் பாதுகாப்பில் பிரமாண்டமாக நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய நாளில் மட்டும் கலந்துகொள்வார்கள்.
அண்ணாமலையார் கோவில் மகா ரதம் என்பது தமிழகத்தில் உள்ள பெரிய மகா ரதங்களில் ஒன்று. அண்ணாமலையார் கோவில் மகா ரதம் 59 அடி உயரம், 200 டன் எடை கொண்டது. இந்த தேரில் உண்ணாமுலையம்மன் உடன் அண்ணாமலையார் மாடவீதி வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.
மகா ரதத்துக்கு முன்பாக 31 அடி உயரம் கொண்ட விநாயகர் தேர், 31 அடி உயரம் கொண்ட முருகர் தேர் பவனி வரும். அதன்பின் மகா ரதமும் அதற்கடுத்து பெண்கள் மட்டுமே இழுக்கும் 46 அடி உயரமுள்ள அம்மன் தேர் வலம் வரும். இறுதியாக 26 அடி உயரம் கொண்ட சண்டிகேஸ்வரர் தேர் வீதியுலா வரும். இதில் மகாரதம் மட்டும் மாடவீதி வலம் வருவதற்காக சுமார் 8 முதல் 10 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். இதனைப் பஞ்ச ரதம் வீதியுலா என்றும் அழைப்பர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_149.jpg)
பஞ்ச ரதத்தின் வீதியுலாவைத்தரிசிப்பதற்காகத்திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி என சுற்றியுள்ள சில மாவட்டங்களில் இருந்து மட்டும் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள். மற்ற நாட்களைவிட மகா ரதம் வீதியுலா அன்று திருவண்ணாமலை நகரமே பெரியளவில் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.
கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கரோனோ விதிமுறைகள் ஒத்துழைக்காததால் அண்ணாமலையார் தீபத் திருவிழா ஆடம்பரம் இல்லாமல் நடைபெறுகிறது. ஆகம விதிகளின் படி கோயிலின் உள்பிரகாரமான ஐந்தாவது பிரகாரத்தில் திருவிழாவுக்காக வடிவமைக்கப்பட்ட சிறிய தேர்களில் உற்சவர்கள் உலா நடக்கிறது. நவம்பர் 16ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழாவின் 7வது நாளான பஞ்ச ரத வீதியுலா தொடங்கி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_553.jpg)
நவம்பர் 17ஆம் தேதி மதியம் முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் வரவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் மாடவீதியில் குவிந்து சாமி தரிசனம் செய்கின்றனர், கிரிவலமும் வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)