ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ந்தேதி, பெரியார் பிறந்த தினம், அண்ணா பிறந்த தினம், திமுக உதயமான தினம் என்பதால் அந்த நாளை திமுக, முப்பெரும் விழாவாக கொண்டாடிவருகிறது. இந்த விழாவில், திமுக உடன்பிறப்புகள் குடும்பத்தோடு வந்து கலந்துக்கொள்வார்கள். பெரும்பாலும் இந்த முப்பெரும் விழா சென்னையில் நடைபெறும். தற்போது தமிழகத்தின் பிறபகுதிகளில் நடத்த துவங்கியுள்ளது திமுக தலைமை.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதன்படி இந்த ஆண்டு முப்பெரும் விழா திருவண்ணாமலை நகரில் நடைபெறுகிறது. திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் திமுகவின் முன்னாள்அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடத்தில் இந்த விழா நடைபெறுகிறது.
இந்த விழாவிற்காக பந்தல் அமைக்கும் பணி ஆகஸ்ட் 23ந்தேதி தொடங்கியுள்ளது. முப்பெரும் விழா நடைபெறும் இடத்தினை திருவண்ணாமலை தெற்கு மா.செவான எ.வ.வேலு தலைமையில் திமுக நிர்வாகிகள் சென்று பார்வையிட்டனர். இந்த விழாவில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் திமுக நிர்வாகிகள் விழாவிற்கு வருவார்கள் என்பதால் திருவண்ணாமலை நகரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள் புக் செய்யும் பணியில் மாவட்ட திமுக உள்ளது.