








Published on 04/05/2022 | Edited on 04/05/2022
வேளச்சேரியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ள, கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, நக்கீரன் ஆசிரியர் மற்றும் பிரக்ஞானந்தா குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.