Skip to main content

கிராம சபைக் கூட்டத்தில் கேள்விகளால் அதிகாரிகளை அலற வைத்த மக்கள் பாதை இளைஞர்... வைரலாகும் வீடியோ...!!

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

கிராம சபை தீர்மானங்கள் என்பது சட்ட மன்றம், பாராளுமன்ற தீர்மானங்களுக்கு இணையானது. அப்படியான கிராம சபைகளில் அரசு அதிகாரிகள் அரசுக்கு எதிரான தீர்மானங்களை தீர்மான நோட்டுகளில் எழுதாமல் மனுவாக வாங்கிக் கொண்டு சென்றுவிடுவதுடன் சரி. அதுபற்றி கேட்டால் மேல் அதிகாரிகள் உத்தரவு அப்படி.. அரசுக்கு எதிரான தீர்மானங்களை எழுதினால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். அதனால் எத்தனை மனுக்கள் வந்தாலும் வாங்கிக் கொண்டு வரச் சொல்லிவிடுவார்கள். வழக்கமாக அரசு திட்டங்களை மட்டுமே எழுதுவது வழக்கமாகிவிட்டது.

 

grama shaba meeting...

 

அப்படித்தான் தற்போது நடந்து முடிந்த கிராம சபைக் கூட்டத்தில் தமிழகத்தில் பலமாவட்டங்களிலும் ஹைட்ரோ கார்பன் வேண்டாம், எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போதும் அந்தந்த கிராமத்தில் உள்ள மக்களின் கருத்து கேட்க வேண்டும் என்று 500 க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் தீர்மானம் கொண்டு வந்தார்கள். ஆனால் அதிகபட்சம் 50 கிராமங்களில் மட்டும் தான் கிராம சபை நோட்டுகளில் எழுதி இருப்பார்கள். மற்ற ஊராட்சிகளில் எழுதப்படவில்லை என்று விளக்கமாக கூறினார்கள் அதிகாரிகள்.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொட்டியம்பட்டி கிராமத்தில் திருமயம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கியதும் அந்த கூட்டத்தில் எழுந்த ஒரு இளைஞர்.. யாருடைய நேரத்தையும் வீணாக்க விரும்பல.. வெளிப்படையான ஊராட்சி நிர்வாகம் வேண்டும் என்பதற்காக தான் இப்ப கேள்விகள் கேட்கிறேன். யாரையும் துன்புறுத்த அல்ல..

 

grama shaba meeting...

 

கிராம சபைக் கூட்டத்திற்கு வரும் ஊராட்சி செயலர் 31 பதிவேடுகள் கொண்டு வரனும் கொண்டு வந்தாரா? பதிவேடுகள் கொண்டு வரவேண்டாம் என்று ஏதேனும் சட்டம் இருந்தால் காண்பிக்க வேண்டும். அதேபோல 16 துறை அதிகாரிகள் கலந்துக்கனும் வந்திருக்காங்களா? ஊராட்சி நடைமுறைச்சட்டம் 1994 சொல்லுது. வந்திருக்கிறார்களா? எந்ததெந்த துறை அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்? வட்டார வழங்கல் அலுவலர் பதில் சொல்லுங்கள்..

ஊராட்சி செயலர் அவர்களுக்க 2018 – 2019 ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை.. வரவு 55 லட்சத்தி 94 ஆயிரத்தி் 660 ரூபாய். செலவு.44 லட்சத்தி இரண்டாயிரத்தி 724 ரூபாய். இந்த வரவு செலவு அறிக்கையை ஊராட்சி செயலர் இங்கே காண்பிக்க முடியுமா? மக்கள் முன்னாடி வெளிப்படையாக வரவு செலவுகளை காட்டணும். ஊராட்சி தலைவர் இப்ப தான் வந்திருக்கிறார். அவரிடம் கேள்வி கேட்க முடியாது. ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் உங்களிடம் தான் கேள்வி கேட்க முடியும்.

2018 – 2019 ஆண்டில் மட்டும் ரூ. 39 லட்சத்தி 47 ஆயிரத்தி 532 ரூபாய் கையாடல் நடந்திருக்கிறது. பல சமூகதணிக்கையில் கண்டறியப்பட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கல..  அப்போது பதில் சொன்ன ஒரு அதிகாரி.. பாராளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் நடந்ததால புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சமூகத் தணிக்கை நடக்கல இனி நடக்கும் அதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். (பாராளுமன்றத் தேர்தல் எப்ப நடந்தது. அதை இப்ப சொல்றார் அதிகாரி.)

மக்களுக்காக.. 2018 – 2019 ம் ஆண்டில் திருமேனி கன்மாய் கருவேலமரங்கள் அழி்க்க ரூ. 3,26,144 செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை சொல்லுது. அப்படி நடந்திருக்கிறதா என்பதை மக்கள் தெரிந்து கொள்ளுங்கள். குறுக்கிட்ட அதிகாரி.. தவாறாக எடுக்க முடியாது. கணக்குகள் இருந்தால் இப்ப காட்டிவிடலாம். என்று சொல்ல அதற்கு தான் கணக்குகளை கொண்டு வரனும் என்று கிராம சபை சட்டம் சொல்லுது என்று சொல்ல அதிகாரி கப்சிப்.. இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை மக்கள் பாதை இளைஞர் கேட்க அதிகாரிகள் ஆடிப் போனார்கள். இறுதியில் மாஜி அமைச்சரும் திருமயம் தொகுதி எம்.எல்.ஏ வுமான ரகுபதி மக்கள் பாதை இளைஞரை பாராட்டிச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்