கரோனா அச்சுறுத்தல் காரணமாக, கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையைத் தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் ஊரக வளர்ச்சித்துறைசுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக,குடியரசுத் தினமான நாளை (26/01/2021) கிராம சபைக் கூட்டம் நடத்தக்கூடாது; மறு உத்தரவு வரும் வரை, கூட்டங்களை நடத்த அனுமதிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.