ADVERTISEMENT

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா! 

08:22 AM Jul 29, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா இன்று (29/07/2022) காலை 10.00 மணிக்கு, விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேருரை நிகழ்த்துகிறார். அதேபோல், இந்த விழாவிற்கு தலைமைத் தாங்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

மேலும், விழாவிற்கு கௌரவ விருந்தினராகப் பங்கேற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்புரை நிகழ்த்துகிறார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ரா.வேல்ராஜ் மற்றும் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, சென்னை முழுவதும் 22,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT