Grace

Advertisment

அரசு மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக முக்குலத்தோர் புலிப்படை நிறுவனரும், திருவாடனை எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.

எழும்பூரில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த நிலையில் கருணாஸ் மனைவி கிரேஸ் இன்று வேலூர் சென்றார். கருணாஸ் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு சென்ற அவர், அங்குகருணாஸூடன் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார்.