/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_420.jpg)
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்மார்ட் மொபிலிட்டி அசோசியேஷன் சார்பில் ஹக் ரொசியோ தாக்கல் செய்துள்ள மனுவில் - ‘மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, வாகனங்கள் செல்லக்கூடிய இடங்களின் புவியிடத்தைக் கண்டறியும் VLTD (வெகிக்கிள் லொக்கேசன் டிராக்கிங் டிவைஸ்) கருவி பொருத்த வேண்டும் என்று, 2018-ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டுள்ளது. பின்னர், அரசுத் துறை வாகனங்கள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், ரிக்ஷாக்கள் ஆகியவற்றிற்கு தளர்வு வழங்கப்பட்டு, மற்ற அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களுக்கும் பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வி.எல்.டி.டி. கருவிகளை, குறிப்பிட்ட எட்டு நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்று, கடந்த நவம்பர் 18-ஆம் தேதி, போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. 140-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ள நிலையில், தன்னிச்சையாக, வெளிப்படைத்தன்மை இல்லாமல், குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது சட்ட விரோதமானது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் வரை தடை விதிக்க வேண்டும்.’ எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட நிறுவனங்களின் வாகன இடம் காட்டும் கருவிகளைப் பொருத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு குறித்து தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)