Advertisment

“நண்பர்களே... சன்னி லியோனுக்கு ஐ லவ் யூ சொல்லிட்டேன்” - குஷியான ஜி.பி முத்து

gp muthu talk sunny leone viral video

“பத்திரிகை நண்பர்களே...சன்னி லியோனுக்கு ஐ லவ் யூ சொல்லிட்டேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று ஜி.பி. முத்து பேசியது பத்திரிகையாளர்கள் இடையே கலகலப்பை ஏற்படுத்தியது.

Advertisment

டிக்டாக் மூலம் பிரபலமடைந்துதற்போது யூ டியூபில் வீடியோ வெளியிட்டு வரும் ஜி.பி. முத்துக்குஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போதுநடந்துகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக ஜி.பி. முத்து கால் பதித்தார். இதனால் உற்சாகமடைந்த அவரது ரசிகர்கள், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஜி.பி. முத்து குறித்த செய்திகளைவைரலாக்கி வந்தனர். இந்நிலையில், தன்னுடைய மகனுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால்பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்துஜி.பி. முத்து வெளியேறினார்.

Advertisment

இதனையடுத்துகோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஜி.பி. முத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது " பத்திரிகை நண்பர்களே...ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுவரைக்கும் 3 படத்துல நடிச்சிருக்கேன். இன்னும் நிறைய படங்கள் நடிக்கப் போறேன். பிக் பாஸ் அனுபவம் சிறப்பாக இருந்துச்சு. அந்த நிகழ்ச்சியில நடிகர் கமல்ஹாசனை நேரில் பார்த்ததே மிகப்பெரிய பாக்கியம். என்னோட குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை. அதுனால்தான், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்துட்டேன்" என ஜி.பி. முத்து தெரிவித்தார்.

அதன்பிறகு, சன்னி லியோன் பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு “சன்னி லியோனுடன் படத்துல நடிச்சது சந்தோஷமா இருக்கு. அவங்களுக்கு தமிழ் தெரியல. வேற ஏதோ மொழி பேசுறாங்க. மொழிபெயர்ப்புதான் பண்ணாங்க” என்று தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள்சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe