gowsalya sakthi

Advertisment

ஆணவப் படுகொலையால் தனது கணவர் சங்கரை இழந்த கவுசல்யா, பறை இசைக் கலைஞர் சக்தி என்பவரை சுயமரியாதை மறுமணம் செய்துகொண்டார். கவுசல்யாவின் மறுமணத்தில் உடுமலை சங்கரின் தந்தை வேலுசாமி மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் கவுசல்யா, சக்தி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''சாதி வெறியர்களின் முகத்தில் கரியை அள்ளிப் பூசிய கருஞ்சட்டை பெண் பெரியாரின் பேத்தி தோழர் கவுசல்யாவுக்கும், பறை அடித்து பகுத்தறிவை பரப்பும் பாசமுள்ள தோழன் சக்திக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Advertisment

சளிப்பும் ஓய்வும் ஒரு சமூக போராளிக்கு தற்கொலைக்கு சமம் - தந்தை பெரியார். கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் - அண்ணல் அம்பேத்கர். பயத்தை விடு இல்லையென்றால் லட்சியத்தை விடு - தலைவர் பிரபாகரன். இந்த மூன்று போராளிகளின் வீரத்தை, லட்சியத்தை மனதில் ஏந்தி செயல்படும் தோழர் சக்திக்கும், கவுசல்யாவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.