Published on 18/09/2020 | Edited on 18/09/2020

அரசு பணியிடங்களில் இடமாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஆணையிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து துறை துணைச்செயலாளர்களுக்கு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், 'கரோனா காரணமாக செலவினங்களைக் குறைக்கும் விதமாக பணியிட மாறுதலை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விருப்பப்பட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கலாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.