govt officer insisting building bridge but not taking action

கடலூர் திட்டக்குடி அருகே ஓடையைக் கடக்க பாலம் இல்லாததால் மார்பளவு தண்ணீரில் சடலத்தைத்தூக்கிச் செல்லும் அவலநிலை உள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த மேலூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அக்கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 70 குடும்பத்தினரும் வசிக்கின்றனர். இவர்களுக்கு தனி சுடுகாடு உள்ளது. சுடுகாட்டிற்குச் செல்லும் வழியில் ஓடை உள்ளது. இந்த ஓடையின் கரை சேதமடைந்தும், ஓடையைக் கடந்து செல்ல பாலம் இல்லாததாலும் தண்ணீரில் இறங்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் உயிரிழப்பு ஏற்படும் போதெல்லாம், சடலத்தைத்தூக்கிக்கொண்டு தண்ணீரில் இறங்கிச் செல்லும் பரிதாப நிலை நீடிக்கிறது. ஓடையைக் கடக்க பாலம் கட்டித்தர வலியுறுத்திபொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

இந்நிலையில், நேற்றுஇருளர் மக்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த வீராசாமி (வயது 65) என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை எடுத்துச் செல்லும் வழியில் உள்ள ஓடையில் தண்ணீர் நிரம்பியிருந்ததால், இறந்தவரின் உடலை 10-க்கும் மேற்பட்டோர் மார்பளவு தண்ணீரில், ஆபத்தான முறையில் ஓடையில் இறங்கி எடுத்துச் சென்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஓடையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.