Advertisment

அனுப்பியது பரிந்துரை மட்டுமே... 7 பேரை விடுதலை செய்ய அதிகாரமில்லை...-தமிழக அரசு பதில்!

ராஜீவ் காந்திகொலைவழக்கில்கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட7 பேரைவிடுதலை செய்யக் கோரி தமிழக அரசுதீர்மானம் நிறைவேற்றி, அந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் 7 பேர் விடுதலை தீர்மானம் தொடர்பாகஇதுவரை ஆளுநர் முடிவெடுக்கவில்லை.

Advertisment

 Govt does not have authority to release 7 persons ...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் தீர்மானம்நிறைவேற்றப்பட்ட நாளில்இருந்து தன்னைசட்டவிரோதமாக சிறையில் வைத்துள்ளனர் எனசென்னைஉயர்நீதிமன்றத்தில்நளினிஆட்கொணர்வு மனு தாக்கல்செய்திருந்தார். தொடர்ந்து நடைபெற்று வந்தவழக்கில் இன்று நடந்த விசாரணையில், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிமனுதாக்கல் செய்யவில்லை. விடுதலை செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும்7 பேரையும்சட்டவிரோதமாக சிறையில் வைத்துள்ளதால் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான், ஆளுநர் கையெழுத்துகூட தேவையில்லைஎனநளினிதரப்பு வாதிட்டது.

இந்நிலையில் அரசு தரப்பில், ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது பரிந்துரை மட்டுமே. 7 பேரைவிடுதலை செய்ய வேண்டும் எனஉத்தரவாக பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை எனபதிலளித்துவாதிடப்பட்டது. இதனையடுத்து நளினிசட்டவிரோதமாக சிறையில் இருக்கிறாராஎன்பதைதெளிவுபடுத்த வேண்டும் எனஉத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை பிப்.18 ஆம் தேதி ஒத்திவைத்தது.

TamilNadu government 7 Tamils release rajeev gandhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe