கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை நான்காம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையில் 17 தொழிற்பேட்டைகளை இயக்கதமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தொழிற்பேட்டைகள் முற்றிலும் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 25% பணியாளர்களுடன் தொழிற்சாலைகளை துவங்கலாம்,தொழிலாளர்களின் உடல் வெப்பத்தை தினசரி கண்காணிக்க வேண்டும். கண்டிப்பாக தனிமனிதஇடைவெளியைபின்பற்ற வேண்டும். 55வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிக்கு வருவதைதவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.