ஒரே காற்று... பெயர்ந்து விழுந்த அரசு பேருந்தின் மேற்கூரை!!

பொள்ளாச்சியில் வீசிய பலத்த காற்றில் அரசு பேருந்தின் மேற்கூரை பெயர்ந்துவிழுந்த சம்பவம் நடந்துள்ளது.

கோவை மாவட்டம் வடக்கிபாளையத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்றுகொங்குநாட்டன்புதூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது அடித்த பலத்த காற்றில் அரசு பேருந்தின் மேற்கூரையானது எதிர்ப்பாராத விதமாக பெயர்ந்து விழுந்தது.

The govt bus roof of the fall!The govt bus roof  fall on the road

இந்த சம்பவத்தில் பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு மாற்று பேருந்தில் பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

அதன்பின் அங்கு வந்த போக்குவரத்து ஊழியர்கள்பெயர்ந்துவிழுந்த மேற்கூரையை சரிசெய்ய முயன்று ஓரளவுக்கு சரிசெய்து பேருந்தை பணிமனைக்கு எடுத்து சென்றனர். அரசு பேருந்தின் இந்தநிலையை பார்த்து பயணிகளே சிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டாலும் இதுபோன்ற சம்பவங்களுக்குஅரசு பேருந்துபராமரிப்பில் போக்குவரத்துத்துறை காட்டும்அலட்சியமே முதன்மை காரணம் என்றும்குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

govt bus kovai
இதையும் படியுங்கள்
Subscribe