மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் வழியிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை காளவாசலில் 50 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பேருந்தை இயக்கியஓட்டுநர் ஆறுமுகத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஓட்டுநர் ஆறுமுகம் சாமர்த்தியமாகப் பேருந்தை நிறுத்திய நிலையில்50 பயணிகளும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். இருப்பினும் இறுதியில் ஓட்டுநர் ஆறுமுகம் மாரடைப்பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.