Advertisment

வழிகாட்டிப் பலகை விழுந்து இளைஞர் பலியான விவகாரம்: அரசுப்பேருந்து ஓட்டுநர் கைது

Govt bus driver arrested  after signpost falls

சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே வழிகாட்டிப் பலகை விழுந்து ஒருவர் பலியான விவகாரத்தில் அரசுப்பேருந்து ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே சாலையில் பயணிப்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் வழிகாட்டிப் பலகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று அந்த வழிகாட்டிப்பலகை மீது எதிர்பாராத விதமாக மோதியது. பேருந்து மோதியதில் அதிர்வுக்குள்ளான வழிகாட்டிப்பலகை, இரு புறமுமிருந்த கம்பங்களோடு பெயர்ந்து விழுந்தது. அதில், இருசக்கர வாகனத்தில் வந்த கொண்டிருந்த சண்முக சுந்தரம் என்ற இளைஞர் படுகாயமடைந்தார். அவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

வழிகாட்டிப்பலகை மீது மோதி விபத்து ஏற்படுத்திய அரசுப்பேருந்து ஓட்டுநர் ரகுநாத் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்தனர்.

Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe