/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_435.jpg)
தென்காசி நகரின் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை கோட்ட அரசுப் பேருந்து ஒன்று ராஜபாளையம் நோக்கி இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு கடையநல்லூர் பேருந்து நிலையம் வந்து, அங்கு பயணிகளை ஏற்றிக் கொண்டிருக்கும் போது தள்ளாடியபடி ஒரு போதை ஆசாமி பேருந்தில் ஏற முயற்சி செய்திருக்கிறார். அதைக் கவனித்துவிட்ட நடத்துநர், “நீ பேருந்துல ஏறாத... பெண்கள் ரொம்ப பேர் இருக்காங்க. உன்னால நிக்கவே முடியல. இங்க வந்து எனக்கு பிரச்சினைகள இழுத்து வுட்டுறாத” என்று சொல்லிக் கொண்டே அந்தப் போதை ஆசாமியை பேருந்து நடத்துநர் பேருந்தில் ஏறவிடாமல் தடுத்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமான போதை ஆசாமி அதுசமயம் நடத்துநரை ஆபாசமாகப் பேசியிருக்கிறாராம். இதனால் கோபமடைந்த நடத்துநர், போதை ஆசாமியைத் தன் கால்களால் மிதித்துள்ளாராம். அதுசமயம் நடத்துநரின் காலணி கீழே விழ அதனை எடுக்க இறங்கிய நடத்துநர், தன்னை இந்த அளவுக்கு ஆபாசாமாகப் பேசிவிட்டானே என்ற மன வேதனையில் மறுபடியும் அந்த போதை ஆசாமியை காலணியால் தாக்கியுள்ளாராம். பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் இதைக் கண்டு அதிரவே அதுசமயம் ஒருவர், நடத்துநரை சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-4_200.jpg)
அதனையடுத்து, அந்தப் போதை ஆசாமி நீண்ட நேரம் பேருந்து நிலையத்திலேயேநின்றிருந்திருக்கிறார். பேருந்தில் நடந்த இந்த சம்பவத்தை யாரோ ஒருவர் செல்போனில் படம் பிடித்து வெளியிட., தற்போது அந்த வீடியோ படு வைரலாகி பரபரப்பாகியிருக்கிறது.
Follow Us