Advertisment

தொப்பூர் கணவாயில் அரசு பேருந்து விபத்து; 25 பேர் காயம்

Govt bus accident at Toppur Pass; 25 people were injured

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகே அரசு பேருந்து விபத்தாகி 25 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தர்மபுரி சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தொப்பூர் கணவாய். இந்த பகுதியை அதிகமாக வாகன விபத்துக்கள் நடைபெறும் பகுதியாக இருந்து வருகிறது. தொப்பூர் கணவாய் பகுதியில் சாலை போடும் பணி நடைபெற்று வருவதால் ஒரு சாலையில் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் இன்று தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த 5B என்ற எண் கொண்ட அரசு பேருந்து ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையை ஒட்டியுள்ள புதர் பகுதிக்குள் புகுந்தது. இந்த விபத்தில் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட 25 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe