Advertisment

ஆளுநர் தேநீர் விருந்து; காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு!

Governor's Tea Party; Congress, Communist parties boycott

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

Advertisment

குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பர்.

Advertisment

அந்த வகையில் குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி மாலை ஆளுநர் ஆர்.என். ரவி தேநீர் விருந்து அளிப்பது குறித்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.

congress governor
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe