ஆளுநர் தேநீர் விருந்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

Governor's Tea Party - Chief Minister M.K.Stal's participation!

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று (15/08/2022) மாலை 05.00 மணிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர்களுக்கு தேநீர் விருந்தளித்தார்.

இந்த தேநீர் விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முக்கிய பிரமுகர்கள், தமிழக அரசின் உயரதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் பங்கேற்றுள்ள நிலையில், அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.

Chennai governor
இதையும் படியுங்கள்
Subscribe